இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இதனை தீர்மானித்துள்ளது.
பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்துச் செய்வதன் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அச்சிட முடியாமல் குவிந்து கிடக்கும் 3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)





