ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த வருட இறுதிக்குள் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கான எழுது கருவி பொருட்களைக் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
(Visited 19 times, 1 visits today)