இலங்கையில் வரி அடையாள எண் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் வரி அடையாள எண் அல்லது டின் இலக்கத்தை பெறுவதனால் மாத்திரம் எவரும் தன்னிச்சையாக வருவான வரி விதிப்பிற்கு உள்ளாக மாட்டார்கள் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
வருடாந்த வரி விலக்கு வரம்பான 1.2 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறை கணக்கொன்றை ஆரம்பிக்கும்போதும், கட்டடத் திட்டங்களுக்கு அனுமதி பெறும்போதும், வாகன பதிவின் போதும், அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவின் போதும் வரி அடையாள எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)