கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அமைச்சரவை ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் உடனடியாக அமுல்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)