ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் தாமதமின்றி 2024 இல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அடுத்த வருடம் நடத்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.





