இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

 

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இஸ்ரேலை விட்டு நாடு திரும்ப விரும்பும் இலங்கை பணியாளர்களுக்கு அதற்கான வாய்ப்பு காணப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், துபாய், அபுதாபி மற்றும் பஹ்ரைன் வழியாக தினமும் மூன்று விமானங்கள் இஸ்ரேலில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இஸ்ரேலிய மக்கள் தொகை, குடியேற்ற அதிகாரசபை மற்றும் வௌியுறவு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட பின்னர் மாத்திரம், இனிவரும் காலங்களில் இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நடைப்பெற்றுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கைப் பணியாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!