இரட்டை குடியுரிமை கொண்ட பிரித்தானியா வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இரட்டை குடியுரிமை பெற்ற மக்கள் இனிமேல் பிரித்தானியர்கள் அல்லாத கடவுச்சீட்டை மட்டும் பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
புதிய விதிகளின்படி இனி பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சிப்பவர்கள் பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது உரிமைச் சான்றிதழை வழங்க வேண்டும்.
இந்த மாற்றம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளவர்கள் உட்பட, வெளிநாடுகளில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.
உள்துறை அலுவலகத்தின் மின்னணு பயண அங்கீகார (ETA) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடிமக்களுக்கு மாத்திரம் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய பிரித்தானிய கடவுச்சீட்டை பெறுவதற்கு சுமார் £94.50 செலவாகும். அதேபோல் உரிமைச் சான்றிதழை பெறுவதற்கு £589 பவுண்ட்ஸ் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





