இலங்கை செய்தி

சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை?

“சட்டமா அதிபரை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார Harshana Nanayakkara தெரிவித்தார்.

சட்டமா அதிபருக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டம் இடம்பெற்றது. அதேபோல அவருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் சிலர் களமிறங்கி இருந்தனர்.

இந்நிலையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“சட்டமா அதிபரை பாதுகாக்க வேண்டும் என ஒரு சாராரும், அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மற்றுமொரு சாராரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

சட்டமா அதிபரை பாதுகாக்கும் நீதி அமைச்சரும் வீடு செல்ல வேண்டும் எனவும் சிலர் கூறிவருகின்றனர்.

ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் உரிய இடங்களில் அவற்றை தாக்கல் செய்யலாம். ஏனெனில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம்.

சட்டமா அதிபரை நீக்குவது பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட வில்லை. குற்றப் பிரேரணை கொண்டுவருவது பற்றியும் கலந்துரையாடப்படவில்லை.” – என நீதி அமைச்சர் மேலும் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!