சிங்கப்பூரில் வேலை இடங்களில் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
சிங்கப்பூரில் வேலை இடங்களில் மனநலப் பிரச்சினைகள் அதிகமாகி வருவதாக தெரியவந்துள்ளது.
Radin Mas தனித்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைமைச் செயலாளருமான மெல்வின் யோங் இதனை தெரிவித்துள்ளார்.
நியாயமான வேலையிட மசோதாவிற்கான இரண்டாம் வாசிப்பை அவர் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
மருத்துவப் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர், நோயாளிகளுக்கு மனநோய் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு மனநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் எனப் பொருள்படும் என்று அவர் சுட்டினார்.
அந்த நடைமுறையைப் பரிசீலிக்கும்படி அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.





