டெல்லியில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சிரமப்படும் மக்கள்!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் இன்று மோசமான நிலையை எட்டியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியின் ஆர்.கே.புரத்தில் காற்று தரக் குறியீடு 380 ஆகவும், ஆனந்த் விஹார் மற்றும் அசோக் விஹார் ஆகிய பகுதிகளில் 355 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதன்காரணமாக நகரம் முழுவதும் இருள் சூழ்ந்த நிலை காணப்பட்டதுடன், மக்கள் சுவாச பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீபாவளி கொண்டாட்டத்தின் போது உச்சநீதிமன்றம் விதித்த 02 மணிநேரத்தையும் தாண்டி பட்டாசுக்களை வெடித்தது காற்று மாசுப்பாட்டை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





