ஐரோப்பா

UK வரும் சட்டவிரோத புலம்பெயர்வோரிடம் இருந்து பணம் பறித்த குடியேற்ற அதிகாரிகள்!

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தோரிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குடியேற்ற அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த குடியேற்றவாசிகளிடம் இருந்து பணியில் இருந்த ஜான் பெர்ன்தால் (John Bernthal), 53, பென் எட்வர்ட்ஸ் (Ben Edwardes) 45, லீ-ஆன் எவன்சன் (Lee-Ann Evanson), 42, பெஸ்மிர் மாடேரா (Besmir Matera) 36, மற்றும் ஜாக் மிட்செல் (Jack Mitchell) 33, ஆகியோர் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் மீது பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவர்கள் இன்று சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இருப்பினும் குறித்த 05 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோரிடம் இருந்து பணம் பெற முயற்சித்தமை தொடர்பான வாட்ஸ்அப் ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்கள் எவ்வளவு பணத்தை பெற்றார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.  ஆயிரக்கணக்கான பவுண்ட்ஸுகளை பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!