செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள்!! இருவர் மீது குற்றச்சாட்டு

கனடா-அமெரிக்க எல்லையில் நிகழ்ந்த புதிய குடிவரவாளர்கள் மரணத்தில் இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Manitoba மாகாணத்தின் Emerson நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மரணித்த சம்பவத்தில் Harshkumar Patel, Steve Shand ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2022ல் இந்திய வம்சாவளி குடும்பம் இறந்த இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க மத்திய வழக்கறிஞர்கள் இவர்கள் இருவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனினும, அமெரிக்காவின் Florida மாநிலத்தை சேர்ந்த இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

January மாதம் 19ஆம் திகதி 2022ஆம் ஆண்டு 39 வயதான Jagdish Patel, 37 வயதான அவரது மனைவி Vaishali, அவர்களின் 11 வயது மகள் Vihangi, அவர்களின் மூன்று வயது மகன் Dharmik ஆகியோரின் உயிரற்ற உடல்கள் அமெரிக்க எல்லையில் இருந்து 12 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!