உடனடி போர் நிறுத்தம் தேவை: கிரேடா துன்பர்க்
இஸ்ரேல் – பாலஸ்தீன போர், 14-வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மனிதநேய ஆர்வலர்களும் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் மனிதாபிமானற்ற செயல்களுக்கு தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளரான கிரேடா துன்பர்க், பாலஸ்தீனத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “இன்றைக்கு பாலஸ்தீனம் மற்றும் காஸாவுக்கு ஆதரவாக நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். உடனடி போர் நிறுத்தத்திற்காகவும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நீதியும் சுதந்தரமும் கிடைக்கவும் உலகம் குரல் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)