சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா நாட்டிற்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அடுத்த மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
டிட்வா’ புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள IMF பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அதன் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் இதனை உறுதிப்படுத்தினார்.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் வெற்றியை ஆராய்வதற்காக அவர் நாட்டிற்கு வருகை தருகிறார்.
, IMF இன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை இலங்கைக்கு மேலும் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கும் அவர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.





