சட்டவிரோத குடியேற்றம் – அமெரிக்காவின் வடகரோலினாவில் திடீர் சோதனை!
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வட கரோலினாவின் (North Carolina) சார்லட்டின் (Charlotte) வங்கி மையத்தில் அமெரிக்க கூட்டாட்சி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருப்பதையும், பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அகற்றப்படுவதையும் உறுதி செய்வதற்காகவும் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பை மேற்பார்வையிடும் DHS, செய்தித் தொடர்பாளர் டிரிசியா மெக்லாலின் (ricia McLaughlin ) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த நடவடிக்கையில் எத்தனை சட்ட அமலாக்க அதிகாரிகள் பங்கேற்றனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஜனநாயகக் கட்சி தலைமையிலான நகரங்களில் குடியேற்றக் கைதுகளை அதிகரிப்பதில் ட்ரம்ப் கவனம் செலுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் சிகாகோ(Chicago), லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) மற்றும் வாஷிங்டனில் (Washington) இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





