இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி – மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 4 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 03 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களுடன் கைதான மேலும் 9 பேரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 07 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 01 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 மீனவர்களின் விளக்கமறியல் காலம் இம்மாதம் 17 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் ஜனவரி0 2 ஆம் திகதி கைதான 11 மீனவர்களின் விளக்கமறியல் காலம் இம்மாதம் 13 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.





