அடுத்த வருடமும் நானே பிரதமர் – BBC க்கு ஸ்டார்மர் பேட்டி
தனது தலைமைத் திறன் தொடர்பான விமர்சனங்களை நிராகரித்து அடுத்த வருடமும் தான் பிரதமராக பதவி வகிப்பேன் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிபிசியின் சிறப்பு நேர்காணலின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மே மாதம் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தனது அரசாங்கத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பு அல்ல எனவும் அவர் கூறினார்.
மெதுவான பொருளாதார வளர்ச்சி, குறைந்த கருத்துக் கணிப்பு மதிப்பீடுகள் மற்றும் தலைமைத்துவ சவால் குறித்த ஊகங்களுக்கு மத்தியில் இந்த கருத்துகளை சர் கெய்ர் வெளியிட்டுள்ளார்.
புத்தாண்டு தின உரையில், பிரிவு மற்றும் சரிவை தோற்கடிப்பதாகவும், 2026 ஆம் ஆண்டு மக்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உணர்வார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
“2024 ஆம் ஆண்டில் நாட்டை மாற்றுவதற்கு ஐந்து ஆண்டு ஆணையுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த வாக்குறுதிக்கு உண்மையாக இருப்பதே எனது இலக்கு,” எனவும் அவர் கூறியுள்ளார்.





