ஒரு மாதம் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால்… அதிசயங்கள் நடக்கும்

இனிப்புகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் தான். ஆனால், பொதுவாகவே சர்க்கரை உடலுக்கு, மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளில் முதலிடம் வகிக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
டீ, காபி முதல் ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்ற பல்வேறு வகையான இனிப்புகள் வரை சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதிக கலோரி கொண்ட சர்க்கரை, உடல் பருமன், நீரழிவு ஆகியவற்றுக்கு காரணமாக இருப்பதோடு, எலும்புகள் வலுவிழத்தல், கல்லீரல் பிரச்சனை, சரும ஆரோக்கியம் பாதித்தில் ஆகிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகிறது.
சர்க்கரையை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது பல கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, சர்க்கரை உட்கொள்வதை குறைக்க அல்லது தவிர்க்க மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர். அதிகமல்ல, சுமார் ஒரு மாத காலம் சர்க்கரையை உட்கொள்ளாமல் இருந்தால், உடலில் அபரிதமான மாற்றங்கள் காணப்படுவதுடன், அதனால் பல நன்மைகளை (Health Tips) கண் கூடாக உணராலாம்.
சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது, டீ, காபி, சர்க்கரை சேர்த்த பானங்கள், குளிர்பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள், பிஸ்கட் உட்பட சர்க்கரை உள்ள அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் தவிர்ப்பதாகும். சிறிதளவு கூட எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பதால், பலவிதமான உடல் நல பிரச்சனைகள் இருந்து விடுபட்டு, உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.
சர்க்கரை உணவுககளையும் முற்றிலும் தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
1. அதிகப்படியான சர்க்கரை சாப்பிடுவது எடை அதிகரிக்கும். சர்க்கரையை கைவிடுவது கலோரிகளை பெருமளவு குறைத்து, உடல் பருமன் (No Sugar Diet For Weight Loss) குறைய உதவுகிறது.
2. சர்க்கரையை கைவிடுவதன் மூலம், உடலின் ஆற்றல் நிலை சீராக இருக்கும், நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக உணருவீர்கள்.
3. கொழுப்பு கல்லீரல் அல்லது கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால், வியக்க வைக்கும் பலன்களை அடையலாம். கல்லீரல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு, பாதிப்பில் இருந்து மீள, நோ சுகர் டயட் உதவும்.
4. அதிக சர்க்கரை உட்கொள்வது சரும ஆரோக்கியத்தை பாதிக்கும். அதை முற்றிலும் கைவிடுவது முகப்பரு, சுருக்கங்கள் மற்றும் பிற சரும பிரச்சினைகளை குணப்படுத்தும்.
5. சர்க்கரை சாப்பிடுவது மனநிலை மாற்றங்களையும் பதட்டத்தையும் அதிகரிக்கும். எனவே, அதை விட்டுவிடுவது மன தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலையை மேம்படுத்துகிறது.
6. அதிக சர்க்கரை சாப்பிடுவதால் நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை பலவீனப்படுத்துகிறது மற்றும் அதை விட்டுவிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.