நீரை துஷ்பிரயோகம் செய்தால் பாடசாலைகளும் நீர்கட்டணத்தை செலுத்த வேண்டும்!
பாடசாலைகளுக்கு இலவசமாக நீர் வழங்கப்படுகின்றமையினால், அது துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், எதிர்காலத்தில் யூனிட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு கட்டணம் அறவிடப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத, 1988ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை தீர்மானத்தின்படி பாடசாலைகளுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த காலங்களில் பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் நீர் பாடசாலை நடவடிக்கைகளுக்கு அல்லாது ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டது.
1000 பேர் பணிப்புரியும் பாடசாலைகளுக்கு நான்கு இலட்சம் நீரை வழங்குவோம். ஒரு பள்ளியில் மாணவர்கள் மற்றும் கல்வி சாரா மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அங்கீகரிக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கிறது. அதைத் தாண்டினால், அந்தத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.