ஆசியாவில் போர் மூண்டால் சீனாவிடம் தோல்வியை தழுவும் அமெரிக்கா!
சீனா மற்றும் தைவானுக்கு இடையே போர் மூளும் பட்சத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் நிச்சயமாக சீனாவின் கையில் அமெரிக்கா தோல்வியை தழுவும் எனக் கூறப்படுகிறது.
பென்டன் வெளியிட்டுள்ள இரகசிய அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வெளியாகியுள்ள ஓவர்மேட்ச் ப்ரீஃப் (Overmatch brief) அறிக்கையில், அமெரிக்க போர் படைகள், முக்கிய போர்க்கப்பல்கள் மற்றும் செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளை கூட அமெரிக்கா பயன்படுத்துவதற்கு முன்பே அதனை ஊடுறுவ அல்லது முடக்க சீனாவால் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பென்டகனின் நிகர மதிப்பீட்டு அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம், அமெரிக்கா மேம்பட்ட மற்றும் விலையுயர்ந்த ஆயுதங்களை நம்பியிருப்பது சீனாவின் விரைவாக உற்பத்தி செய்யப்படும் மலிவான ஆயுதங்களுக்கு இலக்காகக்கூடும் என்பதை எடுத்துக் கூறுகிறது.
அமெரிக்காவின் முக்கியமான சொத்துக்களை நடுநிலையாக்கும் திறனை சீனா வளர்த்துக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் (Guo Jiakun), “தைவான் பிரச்சினையை மிகுந்த விவேகத்துடன் கையாள வேண்டும்” என்று அமெரிக்காவை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை கசிந்துள்ளது.





