இலங்கை

இலங்கை முழுவதும் அதி அபாயம் நிலவும் பிரதேசங்கள் அடையாளம்!

இலங்கை முழுவதும் 50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம் நிலவும் பிரிவுகளாக பதிவாகியுள்ளன.

இந்த மாதத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 6,884 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் நாடளாவிய ரீதியில் 6,884 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 15,953 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 14,912 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 4672 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 7482 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 2,321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,197 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்