மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க யோசனை!
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டு வருவதாக மின் பாவணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த பிரேணைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கோருவதாக அந்த சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக கேட்டுக்கொண்டுள்ளார்.
IMF இன் நிபந்தணைகளுக்கு அமைவாக வருடத்தில் இரண்டு முறை மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது. இதற்கமைய முன்னதாக ஒருமுறை மின்கட்டணத்தை அதிகரிக்க முயற்சித்தும், பின்னர் அது கைவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடத்தில் நான்காவது முறையாக மீண்டும் 56 வீதத்தால் மின்கட்டணத்தை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் மின் கட்டணமானது 200 வீதத்தால் அதிகரிக்கப்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.