ஜெர்மனியில் ஊதியம் பெறுகின்றவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க யோசனை!
ஜெர்மனி நாட்டில் ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பாக நிபுணர்கள் குழு ஆலோசணை நடத்தி இருக்கின்றது.
ஜெர்மனி நாட்டில் எதிர் வரும் காலங்களில் ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்கள் தங்களது ஓய்வு ஊதியம் தொகையை கொண்டு நாளாந்த செலவை ஈடுசெய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டக்கூடிய ஒரு அச்சம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதனால் அரசாங்கமானது 2021 ஆம் ஆண்டு ரிஸ்க் ரெண்ட் என்று சொல்லப்படுகின்ற தனியார் ஓய்வு ஊதிய திட்டம் ஒன்றை அமுல் படுத்தி இருந்தது.
அதாவது அரசாங்கமானது இவ்வாறு தனியார் ஊதியம் தொகைக்கு சாதாரணமாக காப்புறுதி ஒப்பந்தம் செய்தவர்கள் ஒரு பங்களிப்பை மேற்கொள்ள அரசாங்கம் இதனை ஊக்குவிப்பதற்காக மேலதிகமான பங்களிப்பு ஒன்றை வழங்கி வந்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவானது இந்த விடயத்தில் ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது.
அதாவது இந்த ரிஸ்க் ரெண்ட் என்று சொல்லப்படுகின்ற தனியார் ஓய்வு ஊதிய தொகை தொடர்பான விடயத்தில் அரசாங்கம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் குழு ஆலோசணையை வழங்கியுள்ளது.
அதாவது தனி நபர் ஒருவர் ஓய்வு ஊதியத்துக்கு உரிய பங்களிப்பை செலுத்தும் பொழுது வருடாந்தம் 2100 யூரோக்களை வருமான வரி இலாகாவில்இருந்து அவர்கள் மீள பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பு காணப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று இந்த நிபுணர் குழுவானது ஆலோசனையை வழங்கி இருக்கின்றது.