விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ICC எச்சரிக்கை!

பாகிஸ்தான் அணி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை ICC எச்சரிக்கை விடுத்துள்ளது.

2026 T20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் புறக்கணிக்கப்படலாம் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டமானது அதிக வர்த்தக மதிப்பு கொண்ட போட்டி என்பதால், அதனை தவிர்ப்பது பாதிப்பாக அமையுமென ஐ.சி.சி. ICC கருதுகின்றது.

மேலும், இது நியாயமான போட்டி, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தனது நிலைப்பாடு தொடர்பில் பாகிஸ்தான் ICCக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது.

எனினும், முன்னெச்சரிக்கையாக ICCஅறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டுமே பங்கேற்பது உலகக் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது.

ICC போட்டிகள் விளையாட்டு நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சித் தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டவை.

தேர்ந்தெடுத்த போட்டிகளை மட்டும் விளையாடும் முடிவு போட்டியின் ஆன்மாவையும் புனிதத்தையும் பாதிக்கும்.” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2026 ஆண்கள் வு20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவது ICC யின் முதன்மை இலக்காகும்.

அதற்கான பொறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உட்பட அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் உண்டு.

அனைத்து தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், BCI பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை ஆராய வேண்டும்.” என்று கூறியுள்ளது.

போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!