ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை – நேரடியாக தகுதி பெற்ற அணி
தென்னாப்பிரிக்க அணி ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு, சூப்பர் லீக் புள்ளிகளின் அடிப்படையில் நேரடி தகுதி பெற்றது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அந்த தொடருக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 8-வது அணியாக நேரடி தகுதி பெற்றுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் லீக் புள்ளிகளின் அடிப்படையில் தென்னாப்பிரிக்க அணி நேரடி தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக அயர்லாந்து மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு அயர்லாந்து அணி நேரடி தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி சூப்பர் லீக்கில் 21 ஆட்டங்களில் 98 புள்ளிகளுடன் நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
ஏற்கனவே இந்த சூப்பர் லீக்கில் நியூசிலாந்து(175 புள்ளிகள்) முதலிடத்திலும், இங்கிலாந்து(155 புள்ளிகள்) இரண்டாமிடத்திலும், இந்தியா மூன்றாமிடத்திலும் இருக்கிறது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 2 அணிகளுக்கு வரும் ஜூன் மாதம் ஜிம்பாப்வேவில் நடைபெறும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில், அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய 10 நாடுகளும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
South Africa secure the final automatic ICC Men's @cricketworldcup spot following the first #IREvBAN ODI.
More 👉 https://t.co/ZxoRtQRPkK pic.twitter.com/gSEqtbr6Am
— ICC (@ICC) May 10, 2023