இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை விதித்த ICC
இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவை அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓராண்டுக்கு தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) முடிவு செய்துள்ளது.
ICC ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு விதிகளை 3 முறை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜெயவிக்ரம மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மற்றும் 2021 சிலோன் பிரீமியர் லீக் போட்டிகளில் போட்டிகளை நிர்ணயம் செய்வது தொடர்பில் அவருக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து ஊழல் தடுப்பு பிரிவிற்கு தெரிவிக்கப்படவில்லை என்பதும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
(Visited 40 times, 1 visits today)





