மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சிறந்த அணியை அறிவித்த ICC
கடந்த வாரம் இந்தியாவின் நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.
இந்நிலையில், நடந்து முடிந்த தொடரின் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) அறிவித்துள்ளது.
அந்த வகையில், அணியின் தலைவராக தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த அணியில் இந்தியா(India), தென் ஆப்பிரிக்கா(South Africa) மற்றும் ஆஸ்திரேலிய(Australia) அணியை சேர்ந்த தலா மூன்று வீராங்கனைகளும் இங்கிலாந்தை(England) சேர்ந்த இரு வீராங்கனைகளும் பாகிஸ்தானை(Pakistan) சேர்ந்த ஒரு வீராங்கனையும் இடம் பிடித்துள்ளனர்.
அணி விபரம்:
ஸ்மிருதி மந்தனா – Smriti Mandhana (India)
லாரா வோல்வோர்ட் – Laura Wolvaardt (South Africa)
ஜெமிமா ரோட்ரிகஸ் – Jemimah Rodrigues (India)
மரிசான் காப் – Marizanne Kapp (South Africa)
ஆஷ் கார்ட்னர் – Ash Gardner (Australia)
தீப்தி சர்மா – Deepti Sharma (India)
அன்னாபெல் சதர்லேண்ட் – Annabel Sutherland (Australia)
நாடின் டி கிளார்க் – Nadine de Klerk (South Africa)
சித்ரா நவாஸ் – Sidra Nawaz (Pakistan)
அலனா கிங் – Alana King (Australia)
சோபி எக்லெஸ்டோன் – Sophie Ecclestone (England)
நாட் ஸ்கைவர் பிரண்ட் – Nat Sciver Brunt (England)






