செய்தி விளையாட்டு

2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்த ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் 2024ம் ஆண்டிற்கான ICC விருதுகள் வென்றவர்களின் விவரங்கள் இன்று முதல் வெளியிடப்படும் என ICC அறிவித்திருந்தது.

அதன்படி, 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆண்கள் அணியை ICC அறிவித்துள்ளது. இந்த அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் 4 பேரும், இந்திய வீரர்கள் 3 பேரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆண்கள் அணி விவரம்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), பென் டக்கெட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) , ஜோ ரூட் (இங்கிலாந்து), ஹாரி புரூக் (இங்கிலாந்து), கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து) , ரவீந்திர ஜடேஜா (இந்தியா), கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), மாட் ஹென்றி (நியூசிலாந்து). ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).

(Visited 50 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி