அரசியல் இலங்கை செய்தி

கடுமையான முடிவுகளை எடுப்பேன்: சாமர எம்.பி. எச்சரிக்கை!

“ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை SLFP மீள கட்டியெழுப்பும் பயணத்தின்போது கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும்.”

இவ்வாறு அக்கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க Chamara Sampath Dassanayake தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று பதுளையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சாமர எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

“ தேசிய அமைப்பாளர் பதவியென்பது சவாலான விடயமாகும்.
இப்பதவியை வகித்துக்கொண்டு முன்னோக்கி செல்கையில் கட்சிக்காக வேலை செய்யக்கூடியவர்களுடன்தான் இணைந்து செல்ல முடியும்.

புகழுக்காக பதவிகளை வைத்திருப்பவர்களுடன் பயணிக்க முடியாது. எனவே, கடுமையான சில முடிவுகளை எடுக்க நேரிடும்.

அவ்வாறு முடிவுகளை எடுக்கும்போது தவறாக நினைக்க வேண்டாம் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கனவுடன் எவரும் செயல்பட முடியாது. சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயல்படுமாறு கட்சியைவிட்டு சென்றவர்களையும் அழைக்கின்றேன்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!