”ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு அடிப்பணிய மாட்டேன்” – ஸ்டாமர் திட்டவட்டம்!
கிரீன்லாந்து தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு அடிப்பணிய மாட்டேன் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) இன்று மீண்டும் அறிவித்துள்ளார்.
கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அதன் மக்களும் டென்மார்க்கும் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் இந்த விவகாரத்தில் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதித்துள்ளதையும் அவர் கண்டித்துள்ளார்.
கிரீன்லாந்து மீதான தனது நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சாகோஸ் தீவுகளை மொரீஷியஸுக்கு விட்டுக்கொடுக்கும் இங்கிலாந்தின் திட்டத்தை சுட்டிக்காட்டி ட்ரம்ப் பேசியதற்கும் ஸ்டாமர் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டென்மார்க் பிரதமர் நாளைய தினம் இங்கிலாந்திற்கு பயணிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





