செய்தி தமிழ்நாடு

பிரதமர் மோடியின் பேச்சுக்கு முழுதும் கட்டுப்படுவேன் – அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் சாராத அற நெறியில் இருக்கின்ற ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் கொடிசியாவில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர் எனவும் அதற்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து விட்டு வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

போதை பொருளை பொறுத்தவரை இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பிரச்சனை இருந்து வருகிறது என கூறிய அவர் எல்லைப் பகுதிகள் மூலம் போதை பொருட்கள் இந்தியாவிற்குள் வருகிறது எனவும் தற்பொழுது உள்ளூரிலேயே போதைப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் உருவாகிறார்கள் என்றார்.

இதனை கட்டுப்படுத்த அரசியல்வாதிகள், அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேசமயம் தந்தை தாய் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் பலரும் ஒன்றிணைந்து பேச வேண்டிய விஷயம் இது, இல்லையென்றால் ஒரு தலைமுறை அழிந்து விடும் என கூறினார்.

ஜாபர் சாதிக் குறித்தான கேள்விக்கு 2013ம் ஆண்டு ஜாபர் சாதிக் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர் எனவும் தற்பொழுது தேசிய அளவில் Drug criminal ஆக உருவாகியுள்ளார்கள் எனவும் கூறினார். மேலும் ஒருவர் மீது போதை பொருள் வழக்கு இருந்தால் காவல்துறை அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஜாபர் சாதிக் டிஜிபி யிடம் அவார்ட் பெறுகிறார்,

திமுகவினர் அவர்களுக்கு நண்பர்களாக இருக்கிறார்கள், அமைச்சருடன் புகைப்படங்கள் எடுக்கிறார். ஜாபர் சாதிக் இன்று வந்த புதிய மனிதர் அல்ல. 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் இந்த 11 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று வருகிறார். கோவையில் ஒருவர் Suicide blast செய்கிறார் என்றால் அவர் தமிழ்நாடு அரசின் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார்,

அவரை காவல்துறை கண்காணிக்கவில்லை என்பதால் அவ்வாறு மாறுகிறார். இப்படி இருந்தால் தவறு எங்கிருக்கிறது? என கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் ரிவ்யூ மீட்டிங் எடுக்க வேண்டும் அவர்தான் உள்துறை அமைச்சர் இந்த பொறுப்பும் அவரிடம் தான் வரும்.இவர்கள் எல்லாம் எதோ புதிதாக உருவாவதில்லை. போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

வருகின்ற 7,8 தேதிகளில் தென்காசியில் நிகழ்ச்சி ஒன்றை இது குறித்து ஏற்பாடு செய்திருக்கிறோம். இது குறித்து அரசியல் செய்ய வேண்டும் அப்படி அரசியல் செய்தால்தான் மக்களுக்கும் தெரியும். அதே சமயம் சமுதாய அக்கறையுடன் இதனை சரி செய்ய வேண்டும் எனவும் எண்ணுகிறோம் என்றார்.

சீமான் என்னை பற்றி என்ன பேசினார் என்று தெரியவில்லை எனவும் அவருடைய சின்னம் வேண்டுமென்றால் முதலில் சீமான் அதற்கு அப்ளை செய்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை அதற்கு காரணம் கேட்டால் சென்னையில் வெள்ளம் வந்ததை காரணம் காட்டுகிறார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக சீமான் இருந்தால் அந்தச் சின்னம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. அவரை அப்ளை செய்ய வேண்டாம் என்று நான் ஏதேனும் கூறி இருக்கிறேனா? ஆனால் வேறொரு கட்சி அப்ளை செய்து அந்த சின்னத்தை பெற்று விட்டார்கள்.

அண்ணாமலைக்கும் நாம் தமிழர் கட்சி சின்னம் ஒதுக்கப்படாததற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?. உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையம் இதில் கூறியிருப்பது சரிதான் என்று கூறுகிறது. ஆனால் என்னப்பன் புதருகுள் இல்லை என்பது போல் சீமான் என் மீது பழி போடுகிறார். அவரது தொண்டர்கள் தான் சீமான் மீது கோபப்பட வேண்டும். சீமானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன என்று தெரியுமா என்று கூட தெரியாமல் எதற்கெடுத்தாலும் அண்ணாமலை தான் காரணம் எனக் கூறுகிறார் என்றார்.

எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை உபயோகித்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், பேசுபவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் அவர்களை நிறுத்த முடியாது. தற்பொழுது கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் தற்பொழுது உள்ள தலைவர்களை முன்னிறுத்தி பேசுவதில்லை முன்னாள் தலைவர்களை முன்னிறுத்தி தான் பேசுகிறார்கள்.

ஆனால் நாங்கள் தற்பொழுது உள்ள மோடியை பற்றி பேசுகிறோம். மோடி கர்மவீரர் காமராஜரை பற்றி பேசி இருக்கிறார், நடிகர் விஜயகாந்தை பற்றி பேசி இருக்கிறார், எம்ஜிஆர் ஜெயலலிதாவை பற்றி பேசி இருக்கிறார். விஜயகாந்தை பற்றி பேசியதால் தேமுதிக கோவப்பட முடியுமா?, புரட்சித் தலைவரின் பண்புகளை நாங்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றோம், ராஜாஜி பண்புகளை சுட்டி காட்டி இருக்கின்றோம், காமராஜரின் புகழை பாடி இருக்கின்றோம் இவை எல்லாம் எங்கள் கடமை என தெரிவித்தார்.

பி.வி.நரசிம்மராவ் அவர்களுக்கு பாரத ரத்னா கொடுப்பதால் காங்கிரஸ் கட்சி கோபித்துக் கொள்ள முடியுமா?, சரண் சிங், பிரணாப் முகர்ஜி உட்பட பத்து பாரத ரத்னா விருதுகளை இந்த 10 ஆண்டுகளில் வழங்கியிருக்கிறோம். இவர்கள் இருந்த கட்சிகள் எல்லாம் எங்களுக்கு போட்டி கட்சிகள். அவர்களுடைய மாண்பை மக்கள் மன்றத்தில் வைப்பது தான் அதற்கு காரணம். புதுச்சேரியில் எம்ஜிஆர் புகைப்படம் பாஜக பயன்படுத்தியது குறித்தான கேள்விக்கு, புதுச்சேரியை பற்றி நான் பேசக்கூடாது. காமராஜரை புகழ்கிறோம் என்பதற்காக அவரது புகைப்படம் எங்கள் பேனர்களில் இருக்காது,

ஆனால் காமராஜரை நாங்கள் மதிக்கிறோம். அதேபோல ராஜாஜியை பற்றி பேசுகிறோம் என்றால் அவரது புகைப்படம் பேனரில் இருக்காது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் மட்டுமே தான் போஸ்டர்களில் இருக்கும். புதுச்சேரியில் அப்படி இருந்திருந்தால் நீங்கள் அதனை புதுச்சேரியில் கேட்டுக் கொள்ளுங்கள் என பதில் அளித்தார்.

பெரியகருப்பு பேசியது குறித்தான கேள்விக்கு, மோடியின் நகத்தில் உள்ள தூசுக்கு சமம் இல்லை என்று நான் நேற்றே கூறி இருக்கிறேன். காலம் காட்சிகள் மாறும்பொழுது அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரை, 39 தொகுதிகளிலும் எனக்கு பணிகள் உள்ளது அந்த பணிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை மோடி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன்.

திருச்சியில் ஐஜேகே கட்சி பொதுக்கூட்டத்தில் கூட்டம் வராதது குறித்த கேள்விக்கு அதனை அந்த கட்சியில் தான் கேட்க வேண்டும் என பதில் அளித்துச் சென்றார்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி