மிக நல்ல நண்பரான மோடியுடன் பேச ஆவலுடன் இருக்கின்றேன் – டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில், டிரம்ப் இதனை பதிவிட்டுள்ளார்.
நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
எதிர்வரும் வாரங்களில் தனது மிக நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.
நமது இரு பெரிய நாடுகளும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் நம்புகிறேன் என்று டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் மேலும் கூறினார்.
ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு கூடுதலாக 25 சதவீத அபராதம் உட்பட, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.