இந்த கிறிஸ்துமஸில் நான் அமைதியை எதிர்பார்க்கிறேன் – பிரித்தானிய பிரதமர்!
சிறந்த, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிப் பார்ப்பதாக” பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி தற்போது தனது கட்சியின் பொருளாதார மேலாண்மை மற்றும் நாட்டை அவர் எடுத்துச் செல்லும் திசை பற்றிய விமர்சனங்களை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.
இந்நிலையில் அவரது வாழ்த்துச் செய்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கிறிஸ்துமஸில், மக்கள் நாடு முழுவதும் பயணம் செய்வார்கள் எனத் தெரிவித்துள்ள அவர், இந்த தருணம் எது உண்மையில் நமக்கு முக்கியமானது என்பதை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தங்கள் கிறிஸ்மஸை மற்றவர்களுக்கு சேவை செய்வதில் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்கள் NHS மற்றும் அவசர சேவைகளில், எங்கள் ஆயுதப்படைகள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அவர் தனது நன்றியை பகிர்ந்துகொண்டார்.
ஏனென்றால் இது அனைவருக்கும் எளிதான நேரம் அல்ல என்பதை நான் அறிவேன், மேலும் எனது எண்ணங்கள் இந்த கிறிஸ்மஸ் தனிமையில் இருப்பவர்கள் அனைவருடனும் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
“இந்த கிறிஸ்துமஸில், நான் அமைதியை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக மத்திய கிழக்கில் அமைதியை எதிர்பார்க்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.