“நான் அதற்கு தகுதியானவர் அல்ல” – அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தனது நாட்டில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியதற்காக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
58 வயதான மச்சாடோ, இந்த மதிப்புமிக்க விருதை வென்ற முதல் வெனிசுலா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஆறாவது நபர் ஆனார்.
இந்நிலையில், பரிசு அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நோர்வே நோபல் நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகன் (Kristian Berg Harpviken) தொலைபேசி அழைப்பு மூலம் மச்சாடோவுக்கு இது குறித்து தெரிவித்துள்ளார்.
அப்போது, “ஐயோ கடவுளே.எனக்கு வார்த்தைகள் இல்லை, மிக்க நன்றி, இது ஒரு முழு சமூகத்தின் சாதனை. நான் ஒரு நபர் மட்டுமே. நான் நிச்சயமாக அதற்கு தகுதியானவர் அல்ல, இந்த பரிசு வெனிசுலா மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” என்று மச்சாடோ ஹார்ப்விகனிடம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து Xல் ஒரு பதிவில், இந்த தகவலை பகிர்ந்து கொள்ள நள்ளிரவில் எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்டேன், மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தகவலை ரகசியமாக வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டேன். அறிவிப்பிற்கு பிறகு நீங்கள் விரும்பும் எவருக்கும் பரிசு குறித்து சொல்லலாம்” என்று நோர்வே நோபல் நிறுவனத்தின் இயக்குனர் ஹார்ப்விகன் பதிவிட்டுள்ளார்.