நான் நலம் – உடல்நிலை குறித்து மஹிந்த விளக்கம்
தான் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்வியொன்றிற்கு பதிலளித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நான் நல்ல உடல்நிலையுடன் உள்ளேன் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம்.
உங்களால் நான் நோய்வாய்ப்பட்டுள்ளேனா அல்லது நல்லநிலையில் உள்ளேனா என்பதை பார்க்க முடியும் சமூக ஊடகங்களில் வெளியாகும் விடயங்களிற்கு முக்கியத்துவம் அளிக்ககூடாது.
தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவராக இருக்கவிரும்பவில்லை. இளையவர் ஒருவருக்கு அந்த பொறுப்பை வழங்கவேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)