அமெரிக்காவில் 145,000 மின்சார வாகனங்களை திரும்ப பெறும் ஹூண்டாய்
தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் (NHTSA) படி, தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார், டிரைவ் சக்தி இழப்பு காரணமாக அமெரிக்காவில் சுமார் 145,235 மின்சார மற்றும் கலப்பின(Hybrid) வாகனங்களை திரும்பப் பெறுகிறது.
இதன் மூலம் IONIQ 5 மற்றும் IONIQ 6 எலக்ட்ரிக் வாகனங்கள், 2022-2025 மாடல் ஆண்டுகளில் இருந்து ஜெனிசிஸ் GV60, Genesis GV70 மற்றும் Genesis G80 போன்ற மாடல்களை பாதிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் இந்த வாகனங்களில் உள்ள ஒருங்கிணைந்த சார்ஜிங் கட்டுப்பாட்டு அலகுகள் சேதத்தை ஏற்படுத்தலாம் மற்றும் டிரைவ் பவர் இழப்புக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் டீலர்கள் வாகன உரிமையாளர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் பாதிக்கப்பட்ட உதிரிபாகங்களின் மென்பொருள் மற்றும் சேதங்களை ஆய்வு செய்து, மாற்றியமைத்து, புதுப்பிப்பார்கள் என்று அறிவித்துள்ளது.