உக்ரைனில் ஹைப்பர்சோனிக் ஓரெஷ்னிக் ஏவுகணை தாக்குதல்!
ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் ஓரெஷ்னிக் ஏவுகணையை உக்ரைன் நோக்கி ஏவியதாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக மேற்படி ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.
இடைநிலை தூர ஓரெஷ்னிக் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்துவது இது இரண்டாவது முறையாகும். இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்ல கூடியது எனவும், இதனை இடைமறிக்க இயலாது என்றும் புட்டின் அறிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை மட்டுமல்ல, வழக்கமான ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
உக்ரைனில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆளில்லா வான்வழி வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள், அத்துடன் உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகத்தை ஆதரிக்கும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவை இலக்குகளில் அடங்கும்” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் அவ்வாறான ஏவுகணை ஏவப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.





