ஹட்டன் – பலாங்கொடை போக்குவரத்து பாதை தடைப்பட்டுள்ளது!
ஹட்டன் பலாங்கொடை பிரதான வீதியில் மண் மற்றும் கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பலாங்கொடை தெதனகல காப்புப் பிரதேசத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வீதியில் மரத்தென்ன வத்தை பகுதியிலிருந்து பிரதான வீதிக்கு மண் மற்றும் கற்கள் வீழ்ந்துள்ளன.
இதனால், அந்த சாலையில் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் தெதனகல காப்புக்காடு ஊடாக ஹட்டன் பலாங்கொட பிரதான வீதியில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீதியில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சாரதிகளை கோரியுள்ளது.