இந்தூரில் உடலுறவு கொள்ள மறுத்த மனைவியை கொன்ற கணவர்
மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) இந்தூரில்(Indore) கடந்த எட்டு ஆண்டுகளாக தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் கொலை செய்ததாகக் கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய பெண் ஜனவரி 9ம் திகதி ஏரோட்ரோம்(Aerodrome) காவல் நிலைய எல்லைக்குள் கொல்லப்பட்டதாக காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீகிருஷ்ணா லால்சந்தானி(Srikrishna Lalchandani) தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் அவரது உடலை அரசு மகாராஜா யஷ்வந்த்ராவ்(Maharaja Yashwantrao) மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று திடீரென இரத்த அழுத்தம் அதிகரித்ததால் வீட்டில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர் விசாரணையின் போது கடந்த எட்டு ஆண்டுகளாக தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் கோபத்தில் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.





