இலங்கையில் மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவர்
சிலாபம் – அம்பகந்தவில பகுதியில் மனைவியை, கணவன் தீ வைத்து எரித்த கொலை செய்த சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனைவிக்கு தகாத உறவு இருப்பதாகச் சந்தேகித்து இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதால் குறித்த கணவர் தனது மனைவியை தீ வைத்து எரித்துள்ளார்.
குறித்த மனைவி சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணுக்கு 39 வயது எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கணவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)





