அமெரிக்காவில் சூறாவளி அச்சுறுத்தல் – மீள முடியாமல் தவிக்கும் மக்கள் – வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
அமெரிக்காவில் மில்டன் சூறாவளி கரைகடந்து 2 நாட்கள் ஆகியும் அங்கு வெள்ளம் வடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மெக்சிகோ வளைகுடாவில் உருவான மில்டன் சூறாவளி, மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் புளோரிடாவில் கரை கடந்த நிலையில், அங்கு மிக கனமழைக் கொட்டித் தீர்த்துள்ளது.
புளோரிடாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்த நிலையில், அங்கு தவித்தவர்களையும், செல்லப் பிராணிகளையும் கனரக வாகனங்கள் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
(Visited 13 times, 1 visits today)