மில்டன் சூறாவளி எதிரொலி : 23 விமான சேவைகள் இரத்து!
மில்டன் சூறாவளி காரணமாக இங்கிலாந்தில் இருந்து புளோரிடாவிற்கு பயணிக்கும் 23 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மில்டன் சூறாவளியால் ஏற்படும் பாதகமான வானிலை காரணமாக, புளோரிடாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
துரதிருஷ்டவசமாக, இது விர்ஜின் அட்லாண்டிக்கின் விமான அட்டவணையை பாதித்துள்ளது, மேலும் ஆர்லாண்டோ மற்றும் தம்பாவிற்குச் செல்லும் விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விர்ஜின் அட்லாண்டிக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை UK ஏர்லைன்ஸ் விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளனதுடன், தம்பா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் ஆர்லாண்டோவில் உள்ள விமான நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மில்டன் புயல் ஹெலீன் சூறாவளியை விட சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. 165 மைல் வேகத்தில் காற்று வீசும் எனவும் 10-15 அடி அல்லது அதற்கு மேல் புயல் வீசும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.