90 ஆண்டுகளில் பிரான்ஸின் முக்கிய பகுதியை தாக்கிய சூறாவளி : 11 பேர் உயிரிழப்பு!
இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சுப் பகுதியான மயோட்டேயில் பேரழிவை ஏற்படுத்திய சிடோ சூறாவளியில் குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சத்தின் மத்தியில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கையைப் பெறுவது கடினம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மேலும் 246 பேர் காயமடைந்துள்ளதாகவும் மயோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
90 ஆண்டுகளில் மாயோட்டை தாக்கிய மிக மோசமான சூறாவளி இது என்று மாயோட்ட மாகாண முதல்வர் கூறியுள்ளார்.





