பிரேசிலை தாக்கிய சூறாவளி – 06 பேர் பலி, பலர் ஆபத்தான நிலையில்!
பிரேசிலின் தெற்கு மாநிலமான பரானாவில் (Parana) நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த சூறாவளியில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் பெரியவர்கள் மற்றும் ஆறாவது நபர் 14 வயது சிறுமியாவார். அதேநேரம் காயமடைந்தவர்களில் 10 பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 09 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மணிக்கு 250 கிமீ (155 மைல்) வேகத்தில் வீசிய சூறாவளியால் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூறாவளி தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு குறைந்தது ஒருவரைக் காணவில்லை என்று மாநில அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.





