இஸ்ரேல்- ஹமாஸ் போர்: காசாவில் பட்டினியால் உயிரிழக்கும் விலங்குகள்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரினால் காசாவின் வன உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள் பட்டினியால் தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஃபா மிருகக்காட்சிசாலையில் பசியால் வாடும் குரங்குகள், கிளிகள் மற்றும் சிங்கங்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பிறகு 12 வாரங்கள் உணவுக்காக போராடுகின்றன.
இதனால் பல விலங்குகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நான்கு குரங்குகள் ஏற்கனவே இறந்துவிட்டன, ஐந்தில் ஒரு குரங்கு இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அது உணவு கிடைக்கும்போது கூட உணவளிக்க முடியாது என்று மிருகக்காட்சிசாலையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சிங்கங்களுக்கு கோழி இறைச்சிக்கு பதிலாக வாரத்திற்கு ஒருமுறை பாண் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சிங்கங்களின் எடை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.