சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து விலகும் ஹங்கேரி அரசாங்கம்!
ஹங்கேரி அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
ICC கைது வாரண்டின் கீழ் தேடப்படும் இஸ்ரேலிய தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹங்கேரிக்கு அரசு விஜயம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரதமர் விக்டர் ஓர்பனின் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி இந்த நடவடிக்கையை அறிவித்தார்.
கடந்த நவம்பரில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவுடன், இந்த தீர்ப்பு தனது நாட்டில் “எந்த விளைவையும்” ஏற்படுத்தாது என்று கூறி ஓர்பன் நெதன்யாகுவை அழைத்திருந்தார்.
நவம்பர் மாதம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும் என ஐ.சிசி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 45 times, 1 visits today)





