ஐரோப்பிய யூனியன் மாநாட்டை நடத்த ஹங்கேரிக்கு தடை
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் மாநாட்டை நடத்த சுழற்சி முறையில் அந்த அமைப்புக்கு தலைமை வகிக்கும் ஹங்கேரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் ஆதரவாளராக அறியப்படும் ஹங்கேரி பிரதமர் விகடர் ஆர்பன், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக இந்த மாதம் அந் நாட்டு சென்றார். பின்னர் ரஷ்யாவுக்கும் சீனாவக்கும் சென்று அந்த நாடுகளின் தலைவர்களுடன் இது தொடர்பாக அவர் பேசினார்.
இது போரில் உக்ரைனுக்கு தாங்கள் வழங்கி வரும் ஆதரவை சிறுமைப்படுத்துவதாக ஐரோப்பிய யூனியனின் பிற உறுப்பு நாடுகள் குற்றஞ்சாட்டின. இந்த சூழலில் அடுத்த மாதம் நடைபேறும் அமைப்பின் மாநாடு ஹ ங்கேரிக்கு பதிலாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் நடைபெறும் என்று அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் போரெல் அறிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)