ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் நிலத்தடி ரயிலுக்குள் சிக்கிக் கொண்ட நூற்றுக் கணக்கான பயணிகள்

ஆஸ்திரேலியாவில் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சிட்னி பயணிகள் குழு ஒன்று ரயில் சேவையில் இடையூறு காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் நிலத்தடி ரயிலுக்குள் சிக்கிக்கொண்டது.

வடமேற்கு மெட்ரோ பாதையில் ஓடும் ரயில் ஒன்று நேற்று முன்தினம் காலை 8.15 மணியளவில் செர்ரிபுரூக் மற்றும் எப்பிங் இடையேயான பகுதியில் திடீரென நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, ​​ரயிலுக்குள் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் அச்சமடைந்து, குளிரூட்டிகள் செயல்படாததால், பயணிகளின் சத்தம் சுரங்கப்பாதை முழுவதும் எதிரொலித்தது.

ரயில் தாமதம் காரணமாக விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரு குழுவினர் தங்களது விமானத்தையும் தவறவிட்டனர்.

சிக்னல் கோளாறுக்கான காரணத்தை ரயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள் ஆய்வு செய்ய முயன்றும் காலை 10.30 மணி வரை சிக்கலை தீர்க்க முடியவில்லை.

சில மணி நேரம் கழித்து, சிக்னல் அமைப்பு சீரமைக்கப்பட்டு, ரயில் எப்பிங்கிற்கு வந்ததும், ரயில் நிலையம் மூடப்பட்டு, பயணிகள் பஸ்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும், காலை 11 மணியளவில் ரயில் நடைமேடைகள் திறக்கப்பட்டு, ரயில்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன.

இந்தப் பிரச்னையால் பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஒப்புக்கொண்ட மெட்ரோ ரயில் அதிகாரிகள், தாமதத்துக்கு மன்னிப்புக் கோரினர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!