பிரான்ஸில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் கைது
பிரான்ஸில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
யூதமதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 1,040 யுதமத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
நாஸி இலட்சணைகள் சுவற்றில் வரையப்படுவது அதிகரித்துள்ளது. மொத்தமாக 486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 102 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுபோல் நாஸி படையினரின் லட்சணைகளை (ஸ்வாதிஸ்கா) வரைவோருக்கு எதிராக எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.





