கிரேக்கத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து!
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கிரேக்கத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலனிக் (Hellenic) விமான சேவை வழங்குநர் ரேடியோ அதிர்வெண் அமைப்புகளைப் பாதிக்கும் தொழில்நுட்ப சிக்கல் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளார். இது கிரேக்க வான்வெளித் திறனைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கிரேக்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் இத்தாலி (Italy), குரோஷியா (Croatia), ஹங்கேரி (Hungary), அல்பேனியா (Albania) மற்றும் சைப்ரஸ் (Cyprus) உள்ளிட்ட நாடுகளில் உள்ள மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அமைப்புகளை முழுமையாக மீட்டெடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விமான சேவைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





